பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்காதே, கார்ப்பரேட்டுகளுக்கு வெண்சாமரம் வீசி, தொழிலாளர்களை கசக்கிப்பிழியாதே, இந்துத்துவா மதவெறியைத் திணிக்காதே என்று முழக்கமிட்டு தலைநகர் தில்லியில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் செவ்வாய் அன்று கண்டனப் பேரணி நடைபெற்றது.